Crimsun is committed to being a responsible and caring corporate citizen for all its stakeholders and larger society of which we are a part , and especially with regard to the Environment.
Corporate Environment Responsibility
கூட்டாண்மை நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பேணும் கடமை
கிரிம்சன் நிறுவனம் தன்னுடன் தொடர்புடைய பல்வேறு பொறுப்பாளர்களுடன் இணைந்து தான் சார்ந்துள்ள பெரும் சமுதாயத்திற்குச் சுற்றுச் சூழல் பேணும் பணியாற்றுவதற்குத் ஒரு கடமை உணர்வு மிக்க கூட்டாண்மைக் குடிமகனாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.
About Crimsun Organics Pvt Ltd
Crimsun Organics was established in 2016 as a manufacturer of Crop Protection chemical active ingredients and intermediates, with its manufacturing facility in Cuddalore in the state of Tamil Nadu. In 2017 Parijat acquired stake in Crimsun Organics Limited. Parijat is a Crop Protection Products Manufacturer with customer farmers using its branded products across 5 continents, recognized for its Scientific strength, ethical dealings and commitment to Health Safety and environment.
கிரிம்சன் ஆர்கானிக்ஸ் பிரை. லிட் குறித்து
கிரிம்சன் ஆர்கானிக்ஸ் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு பயிர் பாதுகாப்பு வேதிப்பொருள், தீவிர உட்பொருட்கள் மற்றும் இடைநிலைப் பொருட்கள் தாயாரிக்கும் அமைப்பாகத் தோற்றுவிக்கப்பட்டது. அதன் உற்பத்தி மையம் தமிழ் நாட்டிலுள்ள கடலூரில் அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் கிரிம்சன் ஆர்கானிக்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் பங்கில் ஒரு பகுதியை பாரிஜாத் நிறுவனம் தனது பங்காகப் பெற்றுக்கொண்டது. “பாரிஜாத்” பயிர் பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் நவீன விஞ்ஞானத் திறமையைப் பயன்படுத்துதல், எல்லா விதமான வணிகச் செயற்பாடுகளிலும் நெறிபிறழாத நேர்மையைக் கடைப்பிடித்தல், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் பேணல் என்ற துறையிலும் தன் தனித்தன்மையின் காரணமாக விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரிடமும் நல்ல பெயரைச் சம்பாதித்துள்ளது. “பாரிஜாத்” பெயர் தாங்கிய உற்பத்திப் பொருட்களைப் பயன்படுத்தும் அதன் வாடிக்கையாளர்கள் உலகின் ஐந்து கண்டங்களிலும் பரவிக் காணப்படுவது அதன் பெருமைக்கோர் சான்றாக விளங்குகிறது.
Parijat Urja Chakra – 2
Parijat Urja Chakra – 2 is established to actively contribute to the social, cultural and economic development as well as to contribute to the environmental concerns of the communities in which we operate. We are currently promoting and catalyzing universal education among underprivileged children particularly in rural/semi urban areas, create the process to embrace these children into mainstream in a sustained manner, strengthen their abilities to cope up with the formal education system, facilitate them to emerge as productive assets and set the foundation for nation building. The personality development aspect is being enhanced by the Anand Foundation. We have established a library as well as a sports to enhance confidence building, social skills, personal grooming, sports interest.
பாரிஜாத் ஊர்ஜா சக்ரா – 2
பாரிஜாத் நிறுவனம் தான் செயலாற்றிவரும் பகுதியைச் சூழ்ந்துள்ள சமுதாய மக்களின் சமுதாய பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பன்முக மேம்பாட்டு வளர்ச்சியைப் பேணிக் காக்கும் நோக்கத்துடன் “பாரிஜாத் ஊர்ஜா சக்ரா -2” என்ற அமைப்பைத் தோற்றுவித்துள்ளது libido-de.com. தற்சமயம் இந்த அமைப்பு தொழிற்சாலையைச் சூழ்ந்துள்ள ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் பின்தங்கிய குழந்தைகள் மத்தில் அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் சமச்சீர்; கல்வி வளர்ச்சியைப் பரப்பி வருகிறது. அதை மேலும் வலுப்படுத்தி மாணவர்கள் முதல்தர உயர்கல்வியைப் பெறும் நடைமுறையை உருவாக்கியுள்ளது. முறைசார்ந்த கல்வி அமைப்பில் அவர்களின் திறமைகளை வலுப்படுத்திகிறது. அவர்கள் உயர்கல்வி பெற்று கல்வி நிலையங்களை விட்டு வெளியேறும் போது நம் நாட்டின் எதிர்காலத்திற்கான மதிப்புமிக்க சொத்துகளாக விளங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொண்டாற்றுகிறது. அவர்கள் வலிமை மிக்க இந்தியாவின் கட்டமைப்பிற்கான அடித்தளமாக விளங்க வேண்டும் என்பது அமைப்பின் நோக்கமாகும். இங்குள்ளவர்களின் ஆளுமை வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்தும் பணியை ஆனந்த் பவுண்டஷன் மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள அனைவரிடமும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், அவரவர் வயது விரும்பம் ஆகியவற்றிற்கு ஏற்ற தனிவிளையாட்டு, மற்றும் குழு விளையாட்டு வாய்ப்புப் பெற அவற்றிக்கான விளையாட்டுப் பொருட்கள் ஆடரங்க வசதிகள் முதலியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பயன்படும் நூல்களைக் கொண்ட நூலகமும் சமுதாயக் கூடமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.